லோகேஷ் படத்தைத் தயாரிக்கும் கேவிஎன்!

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய ஐந்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து அவர் கைதி-2, விக்ரம்- 2 உள்ளிட்ட படங்களை இயக்க உள்ள நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கேவிஎன் என்ற நிறுவனம் அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

‘எங்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், அவர் கதை சொன்ன விதம் எங்களை ஆச்சரியப்படுத்தியது’ என்றும் தெரிவித்துள்ளதை அடுத்து லோகேஷ் இயக்கும் அடுத்த படத்தை இந்த நிறுவனம்தான் இயக்க உள்ளது உறுதியாகியுள்ளது.

இந்த நிறுவனம் பிரபாஸ் நடிக்கும் படத்தைத் தயாரிக்க உள்ள நிலையில் பிரபாஸ், லோகேஷ் இருவரும் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment