80 வயதில் படம் இயக்கும் மார்ட்டின் ஸ்கார்சிஸ்!

கில்லர்ஸ் ஆப் தி ப்ளவர் மூன் (Killers Of The Flower Moon) படத்தினைப் பற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை. நல்ல படம். மார்ட்டின் ஸ்கார்சிஸி 80வது வயதில் ஒரு படம் எடுத்திருக்கிறார். எது மாதிரியான கதைக்களத்தையும் அவர் கையாண்டிருக்கிறார்.

நியூயார்க் நகரின் இருள் உலகத்தைப் பற்றி படமெடுத்த இவர்தான் தலாய் லாமா பற்றிய Kundun இயக்கினார். இப்போது இன்னும் பொறுப்புணர்வோடு படம் எடுத்திருக்கிறார்.

ராபர்ட் டி நீரோ, மார்ட்டின் ஸ்கார்சிஸி, தெல்மா ஸ்கூன்மேக்கர் மூவரும் ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்கள். தெல்மா ஸ்கூன்மேக்கரின் பெயரை இறுதியில் டைட்டில் கார்டில் பார்க்கும்போது பெருமையாக இருந்தது.

மார்ட்டின் ஸ்கார்சிஸ் ஐம்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்பு இயக்கிய ஆவணப்படங்களுக்கு எடிட்டராகப் பணி செய்தவர் தெல்மா. மார்ட்டினின் மற்றொரு மூளை அவர்.

“மார்ட்டின் என்ன நினைத்து இந்த ஷாட்டினை எடுத்திருப்பார் என்று எனக்குத் தெரியும். அவர் மூளைக்குள் அப்போது என்ன ஓடிக்கொண்டு இருந்திருக்கும் என்பதையும் அறிவேன்” என்பார் தெல்மா.

சும்மாவா! முதல் படம் தொடங்கி இப்போது வெளிவந்த படம் வரைக்கும் தெல்மா தான் மார்டினுக்கு எடிட்டர்.

Raging Bull பட பாக்சிங் சண்டைக் காட்சி,  The Irish man-ல் வரும் துப்பாக்கிச் சூடுகள், wolf of wall street அலுவலகக் கொண்டாட்டங்கள் எல்லாம் நினைவிருக்கிறதா?

50 வருடங்களுக்கு முன்பு பெண்கள் எடிட்டிங் துறைக்கு வருவதே பெரிய விஷயம். அவர் மேல் நம்பிக்கை வைத்து மார்ட்டின் தன்னுடைய முதல் படத்துக்கு வாய்ப்புத் தந்தது முக்கியமானது.

இந்த மூவரும் வயதைப் பற்றி எந்தக் கணக்கும் கொள்ளாமல் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். மார்ட்டினும் தெல்மாவும், ராபர்ட் டி நீரோவும் இன்னும் இன்னும் இணைந்து பணி செய்யவேண்டும்.

தெல்மாவுக்கு வெறும் 83 தான் வயது. ஆனாலும், அவர் போகவேண்டிய தூரம் இருக்கிறதென்றே நம்புவார். அப்படி அவரை நம்ப வைப்பார் மார்ட்டி.

நன்றி: எழுத்தாளர் தீபா ஜானகிராமனின் பேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment