இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில் கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில் அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில் உருவாகியிருக்கும் கமர்ஷியல் திரைப்படம் மாஸ்க்.
2025 நவம்பர் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் பேசிய இயக்குநர் நெல்சன், “இந்தக் கதை கேட்டபோது, இதற்கும் வெற்றி மாறனுக்கும் சம்பந்தமே இல்லையே என நினைத்தேன். படுபயங்கர குதர்க்கமான கதையாக இருந்தது. இயக்குநரைப் பார்த்தே ஆக வேண்டும் என நினைத்தேன்.
எல்லா க்ரைமுக்கும் செட்டாவது போல்தான் இருந்தார். அவர் சொன்னதையெல்லாம் எடுக்கவே முடியாது. இந்தக் கதை ஐடியா எல்லாம் மிகவும் புதுசாக இருந்தது.
விகர்ணன் கதை, கவின் ஹேட்டர் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. ஆனால் வெற்றிமாறன் சார் அதை கொஞ்சம் மாற்றியிருக்கிறார்.
இது ரசிகர்களுக்கு புது எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும். ஜீவி சார் மியூசிக் சூப்பாராக வந்துள்ளது.
கவின் எதற்கும் தயாராக இருக்கிறான். அவன் இன்று மேலே கீழே போய் வந்தாலும், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறான். சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருப்பான். ஒரு குழுவாக அனைவரும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகள்” என்றார்.