இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவனாகவும், அருள்மொழி வர்மனாகவும் முன்னணி நடிகர்களான கார்த்தி மற்றும் ஜெயம் ரவி ரசிகர்களை கவர்ந்தனர்.
தற்போது இருவரும் இயக்குநர் நலன் குமாரசாமியின் ‘கார்த்தி 26’ மற்றும் இயக்குநர் புவனேஷ் அர்ஜுனனின் ‘ஜெனி’ படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளனர்.
கார்த்தி மற்றும் ஜெயம் ரவி தற்போது ஒரே ஸ்டுடியோவில் இந்த படங்களின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருவதாக பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது.
‘கார்த்தி 26’ மற்றும் ‘ஜெனி’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அவர்கள் இருவரும் ஒன்றாக மிகவும் ஜாலியாக இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மகிழ்ச்சியுடன் உரையாடும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரண்டு படங்களிலும் க்ரித்தி ஷெட்டி தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
‘கார்த்தி 26’ ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் ‘வா வாத்தியரே’ என்ற தலைப்பில் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரைப் பற்றிய ஒரு விசித்திரமான நகைச்சுவைப் படம் என்று கூறப்படுகிறது.
இதேபோல், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜெயம் ரவி, கிருத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஃபேண்டஸி படம் ‘ஜெனி’.
– தேஜேஷ்