‘உலக நாயகன்’ கமல்ஹாசன், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் டைரக்ட் செய்யும் ‘இந்தியன்’ இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார்.
அறிவியல் புனை கதையான ‘கல்கி’ படத்திலும் நடித்து கொடுத்து விட்டார். இப்போது கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கும் ’தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார்.
‘நாயகன்’ படத்தை அடுத்து 35 வருடங்கள் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்தப் படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம்ரவி, கௌதம் கார்த்திக், லட்சுமி மேனன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே உள்ளது.
படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன், நடிகை அபிராமி, நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் முதற்கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர்.
இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு, இப்போது செர்பியாவில் நடைபெற்று வருகிறது.
கமல், திரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவுடன் மணிரத்னம் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
-பாப்பாங்குளம் பாரதி.