ஜனநாயகனை மிஞ்சிய ‘பராசக்தி’ ட்ரெய்லர்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் தமிழர் திருநாளை முன்னிட்டு, வரும் 10-ம் தேதி திரைக்கு வருகிறது.

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் கோலாகலமாக நடந்தது. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியானது. டிரைலர் வெளியான 24 மணி நேரம் கடந்த நேரத்தில் 4 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

முன்னதாக, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ ட்ரெய்லர் 2 நாட்களில் 3.8 கோடிப் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் விஜய்யை பின்னுக்கு தள்ளியதில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிக மகிழ்ச்சியும், விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

‘ஜன நாயகன்’ படத்தின் டிரைலர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகன், பராசக்தி படம் ரிலீஸ் ஆவதற்கு முதல் நாள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

– பாப்பாங்குளம் பாரதி.

 
Comments (0)
Add Comment