எம்.ஜி.ஆரைப் போல புகழ் பெறுவார் ஜெய் ஆகாஷ்!

ஜெய் விஜயம் விழாவில் நீதிபதி பேச்சு

ஜெய் விஜயம் வெற்றி விழா

ஏ கியூப் மூவிஸ் ஆப் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து தயாரித்திருப்பதுடன் ஜெய் சதீசன் நாகேஸ்வரன் என்ற தனது நிஜப் பெயரில் இயக்கிய படம் ஜெய் விஜயம்.

இதில் கதாநாயகியாக அக்ஷயா கொண்டமுத்து நடித்துள்ளார். அட்சயாராய், ஏ சி பி ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். பால் பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். சதீஷ் குமார் இசையமைத்துள்ளார். எம் ஜி.மணிகண்டன் எடிட்டிங் செய்துள்ளார்.

இப்படம் சமீபத்தில் தியேட்டரிலும், A க்யூப் மூவிஸ் ஆப்பில் (A Cube movies App) வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து சென்னையில் ஜெய் விஜயம் படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதில் முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி மொஹமத் ஜியாவு தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அன்புச் செழியன், கில்டு சங்கத் தலைவர் ஜாகுவார் தங்கம், ஐஜேகே கட்சித் துணைத் தலைவர் ஆனந்த முருகன், நடிகர்கள் பிர்லா போஸ், காதல். சுகுமார், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பேசிய முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி மொஹமத் ஜியாவுதீன், “இதுவரை சினிமா விழா எதிலும் நான் கலந்து கொண்டதில்லை. இது தான் நான் கலந்து கொண்ட முதல் சினிமா விழா. இப்படத்தில் சிறப்பாக நடித்த ஜெய் ஆகாஷ் உள்ளிட்டவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.

Comments (0)
Add Comment