உற்சாகமாக நடந்த ‘மாமரம்’ டிரெய்லர் வெளியீடு!

ஜெய் ஆகாஷ் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி விரைவில் வெளியாகவுள்ள படம் ‘மாமரம்’.

ஜெய் ஆகாஷ் கதாநாயகனான நடித்து ‘ஏ கியூப் மூவி ஆப்’ பில் (A Cube Movies App) வெளியான ‘ஜெய் விஜயம்’ திரைப்படம் பெரியளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளது. வெளியான மூன்றே நாட்களில் 3 லட்சம் பேரால் பார்க்கப்பட்டு, தற்போது 5 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

அதையடுத்து ‘மாமரம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும் ‘ஜெய் விஜயம்’ படத்தின் வெற்றி குறித்து பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்கிற நிகழ்வும் இணைந்து சென்னை வடபழனி கமலா திரையரங்கில் ஜனவரி 8; 2024 அன்று நடந்தது.

நிகழ்வில் படத்தின் நாயகனும் இயக்குநருமான ஜெய் ஆகாஷ், படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘காதல்’ சுகுமார், சிறப்பு விருந்தினர்களாக ‘உயர்திரு 420′ படத்தின் தயாரிப்பாளர் ‘சிகரம்’ சந்திரசேகர், ‘காமெடி ஜங்ஷன்’ ஜெயச்சந்திரன், ஜெய் ஆகாஷ் ஃபேன்ஸ் கிளப் முதன்மை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment