பிரபல பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா தேவதையை கண்டேன், சர்க்கரை நிலவே, மெல்லினமே போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.
தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழி படங்களில் பாடியிருக்கிறார்.
அதோடு திருப்பதி படத்தில் அஜித்திற்கு அண்ணன் வேடத்தில் இவர் நடித்திருந்தார். பல மாநில அரசு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
Touring Talkies யூடியூப் சேனலுக்கு ஹரிஷ் ராகவேந்திரா பேட்டியிலிருந்து…
வித்யா சாகர் – மெண்டர்
வித்யா சாகர் சார், மைக் எப்படி ஹேண்டில் செய்ய வேண்டும் என்பதை எனக்கு கற்றுத்தந்தார்.. அவரும் எனக்கு மெண்டர் போல இருந்தார்.. அதேபோல ஹை குவாலிட்டி மைக் பயன்படுத்துபவர் ஹாரிஸ் ஜெயராஜ் சார்..
சவுண்டு சிஸ்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி எனக்கு ஹாரிஸ் ஜெயராஜ் சார் நிறைய கற்று தந்தார்..
ஹாரிஸ் ஜெயராஜின் மிகச்சிறந்த பலமே சவுண்டுதான்.. அதை துல்லியமாகக் கையாளும் திறமைதான்.
மேடை நிகழ்ச்சிகளில் கூட ஒரு மூலையில் சவுண்ட் சரியாகக் கேட்கவில்லை என்றால், அவரே நேராகச் சென்று சரி செய்வார். குவாலிட்டி விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்.
ஹாரிஸ் ஜெயராஜ் பாடலைப் பதிவு செய்வதற்கு முன்பே, மைக்ரோபோனில் எந்த இடத்தில் பாடினால் குரல் மிக அழகாகக் கேட்கும் என்பதை தீர்மானிக்க 40 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்வார்.
அதனால்தான் வெளிநாடுகளில் இருந்து பாடி அனுப்புவதை அவர் விரும்புவதில்லை; பாடகர் நேரில் வந்து அவரது ஸ்டுடியோவில்தான் பாட வேண்டும் என்பார்.
ஹாரிஷ் ஜெயராஜ்
வாத்திய கருவிகள் சவுண்டைவிட, பாடகரின் குரல் தெளிவாகக் கேட்க வேண்டும் என்பதில் ஹாரிஸ் உறுதியாக இருப்பார்.
சில நேரங்களில் நான் அதிக சங்கதிகள் போட்டுப் பாடினால், “உன் குரல் பிளைனாக, சாதாரணமாக இருப்பதுதான் பிடித்திருக்கு.. எனக்கு சங்கதிகள் வேண்டாம்” என்று சொல்லி என் குரலின் இனிமையை மட்டும் வெளிக்கொண்டு வருவார்.
மின்னலே பாட்டு ஹிட் ஆன பிறகு, ஹாரிஸ் மீண்டும் மஜ்னு படத்தில் சான்ஸ் தந்தார்.. அதில் ‘முதற்கனவே’ என்ற 7 நிமிட பாட்டு, சினிமாவுக்காகக் குறைக்கப்பட்டது..
இன்றும் மேடைகளில் இதை பாடும்போது, மிகப்பெரிய வரவேற்பை மக்கள் தருகிறார்கள்.. தனக்கு பிடித்த பாடகர் ஹரிஸ் ராகவேந்திரா என்று பல மேடைகளில் சொல்லி உள்ளது எனக்கு பெருமையான விஷயமாகும்.
ஹரிஷ் ஜெயராஜ் நிறைய பேர் “ஹரிஷ் ஜெயராஜ்” என்று அவரையும், “ஹாரிஸ் ராகவேந்திரா” என்னையும் மாற்றி மாற்றி குழப்பத்தில் கூப்பிடுவார்கள்.. அந்த அளவுக்கு மக்கள் மனதில் எங்கள் இருவரின் பெயர்களும் இணைந்துவிட்டன..
காட்ஃபாதர் எஸ்பி பாலசுப்பிரமணியம்
எஸ்பிபி சாரை முதன்முதலில் சந்திக்க காரணமே கங்கை அமரன் சார்தான்.. 30 கல்லூரிகளுக்கான பாட்டு போட்டி, மீனாட்சி கல்லூரியில் அன்று நடந்து கொண்டிருந்தது..
நானும் என்னுடைய கல்லூரி சார்பில் கலந்து கொண்டேன். எஸ்பிபி சார், கங்கை அமரன் அங்கிள், ஆதித்யன் சார், ஸ்ரீவித்யா மேடம் போன்றோர் நடுவர்களாக வந்திருந்தனர்.
என்ன படிச்சாலும் சரி மேடையில் அமரன் அங்கிள் மைக்கை எடுத்து, “இந்த பையனை செலக்ட் செய்துட்டோம். எஸ்பிபியுடன் அடுத்த வாரம் மேடையில் பாடுவான்” என்று சொன்னார்..
இதை கேட்டதும் என்னால் நம்ப முடியாத ஆச்சரியம்.. அப்படித்தான் எஸ்பிபி சாரின் மேடையிலேயே என்னை பாட வைத்தார். உடனே எஸ்பிபி சார் என்னிடம், “நீ என்ன படிச்சாலும் சரி, மியூசிக் துறைக்குதான் வரப்போகிறாய்” என்று ஆசீர்வாதம் செய்தார்..
எஸ்பிபி சார் இன்னொரு சிவாஜி என்றுதான் சொல்லணும்.. நடிகர் சிவாஜி கணேசன் எப்படி தன்னுடைய முகத்தில் நவரசங்களையும் காட்டுவாரோ, அதேபோல் எஸ்பிபி தனது குரலிலேயே அனைத்து உணர்ச்சிகளையும் கொண்டு வந்துவிடுவார்..
மற்ற பாடகர்கள் ஸ்ருதியோடு பாடுவது இயல்பு, ஆனால் எஸ்பிபி மட்டும், பாட்டுக்கு நடுவே சிரித்தால், அந்த சிரிப்புகூட கச்சிதமான ஸ்ருதியிலேயே இருக்கும்..
அவர் பாடாத எமோஷனலே கிடையாது.. ரெக்கார்டிங்கின் போது இசையமைப்பாளர் எதிர்பார்ப்பது என்ன என்று புரியாத நேரங்களில் எல்லாம், எஸ்பிபி இருந்திருந்தால் இந்த பாடலை எப்படிப் பாடியிருப்பார் என்று யோசித்து பார்த்தாலே எனக்கு அதுக்கான விடை கிடைத்துவிடும்..
இப்போதுவரை எஸ்பிபி சார்தான் எனக்கு காட்ஃபாதர், தலைவர்.. அவர் எப்போதும் என்னுடைய இதயத்திலேயே இருப்பார்” என்றெல்லாம் நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
– ஹேமா வந்தனா
நன்றி – Touring Talkies and one India.com