காதல் கதைகளில் நடிக்க ஆசை!

மனம் திறந்து பேசிய ராஷ்மிகா

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம், ‘புஷ்பா’. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது.

இதில் ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஜப்பான் சென்ற ராஷ்மிகா மந்தனா, அங்கு அளித்த பேட்டியில் ‘புஷ்பா 2’ பற்றி கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ராஷ்மிகா ‘புஷ்பா-2′ மிகப் பெரிய படமாக இருக்கும். பாதி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

நான் இந்தியா திரும்பியதும் அடுத்த பாடல் காட்சியை படமாக்குவோம். இதில் என் கேரக்டரான ஸ்ரீவள்ளி, ‘புஷ்பா’வுக்கு மனைவியாகிவிட்டதால் இன்னும் சில பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கிறது. இதில் அதிகமான டிராமாவும் மோதல்களும் இருக்கின்றன.

ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் அதிக மசாலா விஷயங்களும் இருக்கின்றன.

இந்தியாவில் இந்தப் படம் வெளியாகும் அதே நாளில் ஜப்பானிலும் வெளியிட பேசி வருகிறார்கள்” என்றார்.

இதனிடையே பேசிய ராஷ்மிகா மந்தனா “நான் கதைகள் தேர்வில் கவனமாக இருப்பேன்.

ஒரு படத்தின் கதையை தேர்வு செய்யும் முன்பு நான் இரண்டு விதமாக யோசிப்பேன். முதலாவது முழு கதையும் என்னையே சுற்றி வரவேண்டும் என்று ஆசைப்படுவேன்.

இரண்டாவதாக ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய ஒரு விஷயம் படத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்வேன்.

எனது நடிப்பில் விரைவில் திரைக்குவர உள்ள ‘ரெயின்போ’, ‘த கேர்ள்’ போன்ற படங்கள் இதுமாதிரி தேர்வு செய்தவைதான்.

இப்போது அதிரடி படங்களில் நான் அதிகம் இருக்கிறேன். ஆனால் காதல் கதைகளில் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது.

காதல் கதை, கதாபாத்திரங்கள் எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்றார்.

Comments (0)
Add Comment