இந்தியன் – 2 படத்தை நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தியன் படத்துக்கான டப்பிங் வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டியிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் சித்தார்த் மற்றும் ப்ரியா பவானி ஷங்கருடன் ஒரு பெரிய பாடலின் படப்பிடிப்பை ஷங்கர் சமீபத்தில் முடித்தார்.
‘இந்தியன் 2’ படப்பிடிப்பை முழுமையாக முடிக்க கமல்ஹாசன் இடம்பெறும் பிரமாண்ட பாடலை படக்குழுவினர் வைத்துள்ளனர்.
இப்படத்தை நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நடந்து வருகிறது.
‘இந்தியன் 2’ படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் ‘இந்தியன் 3’ படத்தின் சில பகுதிகளை எடுக்க திட்டமிட்டுள்ளார்.
‘இந்தியன் 3’ வரும் ஆகஸ்ட்டில் திரைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்திலும் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பில், அனிருத் இசையமைக்க, நட்சத்திரங்கள் நிறைந்த படமாக இது இருக்கும்.
– தேஜேஷ்