இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட நாட்களாக இசைஞானி இளையராஜா தன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்காக முக்கிய நிகழ்வுகளை தொகுத்து திரைக்கதையை எழுதி வருகிறார்.
இப்படத்தில், இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது.
இப்படத்தை, பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
– தேஜேஷ்