ஷங்கரின் இயக்கத்தில், குளோபல் ஸ்டார் ராம் சரன் நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் பாடலான ஜரகண்டியை வரும் 27ஆம் தேதி ராம் சரணின் பிறந்தநாளில் வெளியிடத் தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர்.
ராம் சரணின் பிறந்தநாள் நெருங்குவது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது. மேலும் விளம்பரங்களுடன் கிக்ஸ்டார்ட் செய்ய சரண் பிறந்தநாள் சரியான நேரம் என்று தயாரிப்பாளர்கள் கருதினர்.
அப்டேட்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது உறுதி.
ராம் சரண் ஆர்வலர்கள் அனைவருக்கும் இது ஒரு பிறந்தநாள் விருந்தாக இருக்கும் எனலாம்.
‘கேம் சேஞ்சர்’ படத்தை 2024-ன் கடைசி காலாண்டில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. ‘கேம் சேஞ்சர்’ என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் கூடிய ஒரு படமாகும். ஷங்கர் இயக்கத்தில் ராஜு தயாரித்த இந்தப் படத்தில் ராம் சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.
“ஜரகண்டி” பாடல் கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
அரசியல் திரில்லர் திரைப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
– தேஜேஷ்