பா.ரஞ்சித், மாரி செல்வராஜுடன் இணைந்த துருவ் விக்ரம்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் இப்படம் பிரபல முன்னாள் இந்திய கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியது என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஏற்கனவே 60 நாட்களுக்கு மேலாக கபடி பயிற்சியில் ஈடுபட்டு வரும் துருவ், தற்போது இறுதிக் கட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு மணத்தி கணேசனே பயிற்சி அளித்த புகைப்படங்கள் வெளியாகியது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment