‘சிக்மா’ சிறந்த விஷுவல் அனுபவத்தைத் தரும்!

இயக்குநர் ஜேசன் சஞ்சய்

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’.

பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷனுடன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜாபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திரையுலகத்திலும் ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது இந்தப் படம்.

இதனிடையே, படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளனர்.

படம் குறித்து, படத்தின் தயாரிப்பாளர் லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி ஜி.கே.எம். தமிழ் குமரன்  பேசும்போது,

இயக்குநர் ஜேசன் சஞ்சயின் தெளிவான திட்டமிடலும், முழு அர்ப்பணிப்பும் இந்தப் படத்தின் தயாரிப்பில் முக்கிய பங்காற்றியுள்ளது.

முதலில் 80 நாட்களாக திட்டமிடப்பட்ட படப்பிடிப்பை, ஆக்‌ஷன் மற்றும் பாடல் காட்சிகள் உட்பட, திட்டமிட்ட காலத்துக்கு முன்பே படக்குழு முடித்துள்ளது” என்றார்.

இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேசுகையில், “எனது கிரியேட்டிவ் செயல்முறையில் முழு நம்பிக்கை வைத்ததாலேயே, திட்டமிட்ட 80 நாட்களுக்கு முன்பாகவே படப்பிடிப்பை நிறைவு செய்ய முடிந்தது.

நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் ஒத்துழைப்பிற்கு மனப்பூர்வமான நன்றி.

‘சிக்மா’ படம் பார்வையாளர்களுக்கு சிறந்த விஷுவல் அனுபவத்தை வழங்கும் என நம்புகிறேன்” என்றார்.

தொழில்நுட்பக் குழு:

இசை : தமன் எஸ்
ஒளிப்பதிவு : கிருஷ்ணன் வசந்த்
எடிட்டிங் : பிரவீன் கேஎல்
விஎஃப்எக்ஸ் மேற்பார்வை : ஹரிஹரசுதன்
இணை இயக்குநர் : சஞ்சீவ்
தயாரிப்பு நிறுவனம் : லைகா புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் : சுபாஸ்கரன்
தலைமை நிர்வாகி : ஜி.கே.எம். தமிழ் குமரன்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா

Comments (0)
Add Comment