பாலா – கலைநேர்த்தி மிக்க இயக்குநர்!

தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் சில முக்கிய இயக்குநர்களில் ஒருவர் பாலா.

சாதாரண மசாலா படங்களுக்கு மத்தியில் சமூகத்தில் இருக்கக்கூடிய சில கலாச்சாரங்கள் மற்றும் சில பிரச்சனைகளை வெளியுலகிற்கு அவர்களின் வாழ்க்கையை சிறந்த திரைக்கதை வடிவமைத்து எடுத்துரைத்துள்ளார் பாலா.

இந்தப் பட்டியலில் இயக்குநர் பாலா இயக்கிய சிறந்த திரைப்படங்கள் உள்ளன.

நந்தா, சேது, பரதேசி, பிதாமகன் என இயக்குநராக பாலா வெற்றி பெற்ற திரைப்படங்கள் பட்டியலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

சேது

சேது 1999-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் விக்ரம், அபிதா, சிவகுமார் மற்றும் பலர் நடித்த அதிரடிக் காதல் திரைப்படம். படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா.

நந்தா

பாலா இயக்கத்தில், 2001-ம் ஆண்டு, சூர்யா, லைலா, கருணாஸ், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்த அதிரடிக் காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பிதாமகன்

2003 -ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடித் திரைப்படம் பிதாமகன். இத்திரைப்படத்தினை இயக்குநர் பாலா இயக்க, விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா, மகாதேவன், கருணாஸ், மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

நான் கடவுள்

நான் கடவுள் 2009-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குநர் பாலா இயக்க, ஆர்யா மற்றும் பூஜா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இக்கதை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ஏழாம் உலகம் என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

பரதேசி

பாலா இயக்கத்தில் அதர்வா மற்றும் வேதிகா நடித்து 2013-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் பரதேசி. படத்திற்கான வசனத்தை நாஞ்சில் நாடன் எழுதி, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் பி. எச் டேனியலின் ரெட் டீ என்ற ஆங்கில நாவலை அடிப்படையாகக் கொண்டது.

தமிழில் இந்நாவலை ‘எரியும் பனிக்காடு’ என்ற பெயரில் இரா முருகவேள் மொழிபெயர்த்திருக்கிறார். 1930-ம் ஆண்டுகளில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

– நன்றி: ஃபிலிம் பீட்

 
Comments (0)
Add Comment