‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத், பின்னர் ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்துடன் கை கோர்த்தார்.
‘வலிமை’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘துணிவு’ ஆகிய மூன்று வெற்றிப் படங்களை அஜித் – வினோத் கூட்டணி கொடுத்தது.
அடுத்ததாக கமல்ஹாசனை எச்.வினோத் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ‘KH 233’ என இந்த படத்துக்கு பெயர் வைக்கப்பட்டது.
இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அந்தப் படம் உடனடியாக தொடங்கப்படாத நிலையில், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தில் எச்.வினோத் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது ஒரு புதிய செய்தியாக தனுஷை வைத்து எச்.வினோத் படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
தனுஷ் தற்போது ‘D50’ படத்தை இயக்கி முடித்துவிட்டார். இப்போது சேகர் கமுலா இயக்கும் ‘D51’ படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு எச்.வினோத்துடன் இணைவார் எனத் தெரிகிறது. ராணுவப் பின்னணியில் இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.