நடிகர் மம்மூட்டியின் பிரம்மயுகம் திரைப்படம் உலக அளவில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடிப்பில் கடந்த 15ம் தேதி பிரம்மயுகம் திரைப்படம் வெளியானது.
இப்படத்தில், அர்ஜுன் அசோகன், சித்தார்த், பரதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
நிலையில், கடந்த 10 நாட்களில் உலக அளவில் 50 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. கேரளாவில் மட்டும் 20 கோடியே 10 லட்சம் வசூலித்துள்ளது.
– தேஜேஷ்