அஜித்துக்கு அடையாளம் கொடுத்த பரத்வாஜ்!

மதுரை வளையங்குளம் சுற்று சாலை அருகே உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில், அந்தக் கல்லூரி பற்றிய பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில், அந்த பாடலை எழுதிய முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் அந்தப் பாடலை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது இறையன்பு மற்றும் இசையமைப்பாளர் பரத்வாஜ் மாணவர்களிடம் சிறப்பு உரையாற்றினார்கள். அப்போது இசையமைப்பாளர் பரத்வாஜ் தான் இசையமைத்த ஆட்டோகிராப், ஜேஜே உள்ளிட்ட படங்களில் இருந்து பாடல்களைப் பாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய இறையன்பு ஐ.ஏ.எஸ், கல்லூரி ஆண்டு விழாக்களில், இனி பிரபலங்களின் அறிவுரை நிகழ்ச்சி நடத்தத் தேவையில்லை.

இதுபோன்ற இசை நிகழ்ச்சி நடத்தினால் மாணவர்களும் ரசனையோடு, தங்களைப் புதுப்பித்துக்கொள்வார்கள் என்றார். 

அவரைத் தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் பரத்வாஜ், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அஜித்துடன் நெருக்காமான நட்பு தொடர்கிறது என்றும், அவருடைய 6 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளேன் என்றும் அவருடையா எல்லா விதமான கதைகளுக்கும் இசை அமைத்துள்ளேன் என்றும் கூறினார்.

அதோடு, பலரும் அஜித்தை ‘தல’ என்று அழைப்பதற்கு காரணமான “தல போல வருமா…” என்ற பாடலுக்கு இசை அமைத்தது மிகுந்த மகிழ்ச்சி என்று கூறிய பரத்வாஜ், தற்போது படத்தில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால், நான் இன்னும் அதைப் பற்றி யோசிக்கவில்லை. இனி வந்தால் பார்க்கலாம் என்றார்.

Comments (0)
Add Comment