‘எங்க வீட்டுப் பிள்ளை’ படமும் பின்னணியும்!

1965-ம் ஆண்டு விஜயா புரொடக்சன்ஸ் சார்பில் பி. நாகிரெட்டி தயாரிப்பில் டி பி சாணக்யா இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான திரைப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை’.

இந்தப் படத்தில் நம்பியார், சரோஜா தேவி, தங்கவேலு, நாகேஷ், ரத்னா, எஸ். வி. ரங்காராவ், மாதவி, பண்டரி பாய், எல். விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

இசை இரட்டையர்களான விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். கவிஞர் வாலி – ஆலங்குடி சோமு ஆகியோர் பாடலாசிரியராகப் பணியாற்றினர்.

இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர், ‘சக்தி’ டி. கே. கிருஷ்ணசுவாமி.

இப்படத்தின் பாடல்களுக்குக் குரல் கொடுத்திருப்பவர்கள்: 

*நான் ஆணையிட்டால்….. (டி.எம். சௌந்தரராஜன்)

 *நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்….. (டி.எம். சௌந்தரராஜன் எல்.ஆர். ஈஸ்வரி)

*கண்களும் காவடி சிந்தாகட்டும்….. (எல்.ஆர். ஈஸ்வரி குழுவினர்)

*பெண் போனாள்… இந்தப் பெண் போனால்…..(டி.எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா)

*மலருக்குத் தென்றல் பகையானால்…..(பி. சுசீலா மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி)

*குமரிப் பெண்ணின் உள்ளத்திலே…..(டி.எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா)

Comments (0)
Add Comment