பழசை அசைபோடும் மனசு!

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பழைய புகைப்படம் ஒன்றை அண்மையில் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில், ‘அன்புள்ள ரஜனிகாந்த்’ படத்தை வெட்டி ஒட்டிக் கொண்டிருந்தபோது நானும் ஒட்டிக் கொண்டிருப்பதை இன்றே கண்டேன். நிகழ்வுகளைவிட, நினைவுகள் மனதில் அசைப்போட சுவையானவை. இன்று இதைப் பகிரும் இந்த நிகழ்வும் நாளைய நினைவின் சுவையே! எனப் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் கே நட்ராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், மீனா, அம்பிகா உள்ளிட்டோர் நடிப்பில், 1984-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், அவரது சீடரான பார்த்திபன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து போயிருப்பார்கள்.

Comments (0)
Add Comment