நடிகை தமன்னாவின் சினிமா வயது ‘19’!

நடிகை தமன்னா, ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் 2005 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

தமன்னா, சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்ட திரையுலகத்தினர்,  ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

34 வயதான நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் நடித்துள்ளார்.

அயன், பாகுபலி, ஊசரவல்லி, ஜெயிலர், என்டர்டெயின்மென்ட், மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ்-2 போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

நடிகைகள் 5 அல்லது 10 ஆண்டுகள் கதாநாயகியாக தாக்குப் பிடிப்பது மிகப்பெரிய விஷயம்.

ஆனால் நயன்தாரா, திரிஷாவை அடுத்து தமன்னா தனது 19 வருட திரை வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார்.

அவரது படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. தமிழ் திரை உலகை பொருத்தவரை அவர் விஜய் அஜீத், சூர்யா, தனுஷ், கார்த்தி உள்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தெலுங்கில் பிரபாஸ், அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமன்னா நடித்துள்ளார்.

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

‘கிளாமர்’, ‘செண்டிமெண்ட்’ நடிப்பிலும் அசத்தும் தமன்னா ஒரு சில படங்களில் ஆக்ஷன் வேடத்திலும் நடித்துள்ளார்.

திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்து 19 வருடங்கள் ஆகியும் இன்னும் இளம் நடிகைகளுக்கு இணையாக கைவசம் நான்கு படங்கள் வைத்துள்ளார்.

இந்திய திரை உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் தமன்னா உள்ளார்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு தமன்னா நன்றி தெரிவித்து உள்ளார்.

அதில் “ரசிகர்கள் விரும்பும் படங்களைத் தொடர்ந்து வழங்குவேன் – இன்னும் பல ஆண்டுகள் அன்பால் நிரம்ப இருக்கின்றன” எனக் கூறியுள்ளார்.

– பாப்பாங்குளம் பாரதி

Comments (0)
Add Comment