அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தேன்!

சில்க் ஸ்மிதா கடைசிப் பேட்டி!

23.09.2009 இல், ஆனந்த விகடனில் வெளிவந்த நடிகை சில்ஸ் ஸ்மிதாவின் கடைசிப் பேட்டியின் ஒரு பகுதி.

“நடிக்கத் தொடங்கியது முதல் உடம்பை ஒரே சீராக வைத்திருக்கிறீர்களே.. என்ன ரகசியம்?

“எங்கள் வீடே ஒரு மினி ஹெல்த் கிளப். அவ்வளவு உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளன. ஆனால், நான் எந்தப் பயிற்சியும் செய்வதில்லை.

என் உடல் எடை ஏறாதபடி உணவுக் கட்டுப்பாடு கடைப்பிடிக்கிறேன். பெரும்பாலும் பிரேக்ஃபாஸ்ட் கிடையாது. மதியம் ஒருவேளை அரிசிச் சாதம், அசைவ உணவு. சிக்கன் கொஞ்சம் வைத்துச் சாப்பிடுவேன். அதுவும் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் சைவச் சாப்பாடு.

இரவு பிஸ்கட் மட்டும் சாப்பிடுவேன்! எனது உணவில் கட்டாயமாக இருக்க வேண்டியது வெஜிடபிள் சாலட்”

“ஓய்வு நேரத்தை எப்படிக் கழிக்கிறீர்கள்?”

“என் நன்றியுள்ள நண்பர்கள் என் நாய்கள்தான். ஆறு நாய்களில் ஒன்றான பாபு இறந்து விட்டான்.

அவன் இறந்த அதிர்ச்சியில் அவன் ஜோடியான பெண் நாயும் இறந்து விட்டது. நான் இரண்டு நாட்கள் சாப்பிடவில்லை.

அழு கையே வந்துவிட்டது!”

-நன்றி: ஆனந்த விகடன்

Comments (0)
Add Comment