‘மங்கை’ -ஆண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்!

- நடிகை கயல் ஆனந்தி

குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தில் ஆனந்தி துஷி, பிக்பாஸ் புகழ் சிவின் ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

பெண்கள் மீதான அத்துமீறலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு பெண் மீது தவறான குற்றம் எழும்போது அவள் எந்த விதமான எல்லைக்கும் செல்வாள் என்பதை கயல் ஆனந்தி இந்த படத்தில் தத்ரூபமாக நடித்திருக்கிறார். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கட்டாயம் பார்க்கும் படமாகத்தான் மங்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தீசன் இசையமைத்திருக்கிறார். ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் ‘மங்கை’ பட இசை வெளியீட்டு விழாவில் ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர் டீன், பாடலாசிரியர் கார்த்திக் நேத்து, தயாரிப்பாளர் ஜாஃபர், ஒளிப்பதிவாளர் ஸ்டார், கிடா பட இயக்குநர் ரா. வெங்கட் மற்றும் படக்குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அண்மையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை கயல் ஆனந்தி, ஆண்கள் என்ன பெண்கள் என்ன எல்லோரும் மனிதனாகப் பிறந்தால் இந்த உலகில் சம்மானவர்கள் தான் என்றார்.

அதோடு, ஒரு ஆணின் பார்வையில் பெண் எப்படிப் பார்க்கப்படுகிறாள் என்பதைப் பற்றிய கதையில் ‘மங்கை’ படம் உருவாகி இருக்கிறது.

ஒரு துணிச்சலான பெண் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மங்கை படம் உருவாகி இருக்கிறது என்றும் பேசினார் கயல் ஆனந்தி.

Comments (0)
Add Comment