நடிகை ஜோதிகா நடிப்பில் இந்தியில் வெளியாகியுள்ள சைத்தான் திரைப்படம் 3 நாட்களில் 54 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் கடந்த 8ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இப்படம் வெளியான மூன்று நாட்களில் சுமார் 54 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இந்தியில் மட்டுமே இந்தப் படம் வெளியாகியுள்ள நிலையில், பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி இருந்தால் முதல் நாளில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகிறது.
– தேஜேஷ்