‘லியோ’ படத்தை அடுத்து ‘இளையதளபதி’ விஜய் இப்போது ‘கோட்’ (The Greatest of All Time) படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு டைரக்டு செய்கிறார்.
அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த ‘கோட்’ படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி, சினேகா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒரு காலத்தில் ஹீரோக்களாக வலம் வந்த பிரசாந்த், பிரபு தேவா, ‘மைக்’ மோகன், ஜெயராம் மற்றும் அஜ்மல், யோகிபாபு, லைலா, பார்வதி நாயர் ஆகியோரும் இந்தப் படத்தில் உள்ளனர்.
யுவன்ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஏற்கனவே தாய்லாந்து, துருக்கி, இலங்கை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இப்போது ‘கோட்’ படத்தின் ஷுட்டிங் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்து வருகிறது. பனி படர்ந்துள்ள சாலைகளில் விஜய் நடித்துள்ள காட்சிகளை தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது, விஜய்க்கு 68-வது படம். இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட விஜய் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-பாப்பாங்குளம் பாரதி.