90-களில் இளைஞர்களை ஆடவைத்த ‘பேட்டராப்’ பாடலை நம்மால் மறக்க முடியாது. நடனப் புயல் ‘இந்தியன் மைக்கேல் ஜாக்சன்’ பிரபுதேவாவின் அதிரடி நடனத்தில் இயக்குனர் எஸ்ஜெ சினு இயக்கத்தில் ‘பேட்டராப்’ என்ற திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.
நேற்று பிரபலங்கள் தங்கள் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பேட்டராப் திரைப்படத்தின் ‘FIRST LOOK’ போஸ்டரைப் பகிர்ந்துள்ளனர்.
பேட்டராப் படத்தைப் பற்றிப் பேசிய இயக்குனர் எஸ்ஜெ சினு, “பிரபுதேவா உடன் ஜோடி சேரும் வேதிகா, பிரபுதேவாவுடன் போட்டி போட்டு நடனத்தில் கலக்கியிருக்கிறார். இமான் இசையில் பத்து பாடல்கள் ரசிகர்களைத் திரையரங்குகளில் ஆடவைக்கும். குடும்பங்கள் கொண்டாடும் இளைஞர்களின் படமாக வந்திருப்பதாக கூறுகிறார்.