சினிமாவில் கால் நூற்றாண்டுகளைக் கடந்த மகேஷ்பாபு!

தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்த கிருஷ்ணாவின் மகனான மகேஷ் பாபு, இள வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன்பின்னர், தனது 25-ஆவது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவரது முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி ஆகிய திரைப்படங்கள் அவற்றின் வணிக வெற்றிக்காக அறியப்பட்டவை. ஒக்கடு திரைப்படம் கில்லி என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக்கப்பட்டது. போக்கிரி (திரைப்படம்) அதே பெயரில் தமிழாக்கப்பட்டது. மகேஷ் ஆறு நந்தி விருதுகளையும், இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்தித் திரைப்பட நடிகை நம்ரதா ஷிரோத்கரை விரும்பி மணம் முடித்துள்ளார். இவர் தம்சப், அமர்தாஞ்சன், யுனிவர்செல் ஆகியற்றின் விளம்பரத் தூதராவார்.

நடிகர் மகேஷ் பாபு பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அவரே ‘ரெயின்போ’ என்ற பெயரில் குழந்தைகள் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.

அங்கு ஏழைக் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுகிறார். இதுவரை மகேஷ் பாபு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதுமட்டுமின்றி தனது மாநிலத்தில் இரண்டு கிராமங்களை தத்தெடுத்துள்ளார்.

சாலைகள், மின்சாரம், பள்ளிகள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர்.

இப்படி பலத் தொண்டுகளையும் சேவைகளையும் செய்து வரும் நடிகர் மகேஷ்பாபு இன்று தனது 49-வது  பிறந்தநாளை  ரசிகர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

Comments (0)
Add Comment