திரைக்கதையின் ‘மிக முக்கியமான’ விஷயம்!

படிக்கும் காலத்திலிருந்தே நண்பர்களிடம், நிறைய கதைகள் குறித்தது விவாதிப்போம்.
 
ஆனால், அவற்றையெல்லாம் ஏன் திரைக்கதையாக எழுதுவதில்லை என்றால், அந்தக் கதையின் மீது ஆரம்பத்தில் இருந்த சுவாரஸ்யம் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இல்லாமல் போனதே காரணம்.
 
கதை ஆரம்பித்து கால் மணிநேரம், அரை மணிநேரம் அல்லது ஒரு சில கதைகள் ஒரு மணிநேரத்தில் நகர்த்த முடியாமல் ஏதோ ஒரு இடத்தில் சிக்கி நின்று விடுகிறேன்.
 
எனவே, இதுவும் மற்றக்கதைகள் போல சாதாரண கதைதான் என்று நாமே நினைத்துக்கொள்கிறோம்.
 
ஆனால், ஒரு திரைக்கதையின் மிக முக்கியமான விஷயம் என்னவன்றால், அது சினிமா என்ற வடிவத்திற்குள் பொருந்திப்போக வேண்டும்.
 
ஒரு நல்ல ஆரம்பம், இடைவேளைக்கு ஏற்ற உச்சகட்ட கட்சி, அதற்கடுத்து இரண்டாம் பாதி கதை என திரைக்கதை முடிச்சுகளையெல்லாம் தீனிப்போடுவது போல ஒரு கதை அமைய வேண்டும்.
 
திரைப்பட வடிவத்திற்குள் அது உட்கார வேண்டும். பல கதைகள் அந்த வடிவத்திற்குள் பொருந்தாமல் நீர்த்துப்போய்விடுகின்றன. இது ஒரு பிரச்சனை.
 
அடுத்தது, நீரோட்டம் போல தங்குதடையில்லாமால் கதை நகர்வது. நீங்கள் உட்கார்ந்தால் ஆரம்பம் முதல் முடிவு வரை, அந்தக் கதையோட்டம் இருக்க வேண்டும். இந்த ஆளுமை இல்லாவிட்டால் நீங்கள் எழுதக் கூடாது.
 
‘96’ திரைக்கதை பொறுத்தவரை, கதை எங்கும் தொய்வடைந்து நிற்கவேயில்லை. கொஞ்சம் கொஞ்சமாக திரைக்கதை நுணுக்கங்களை மொறுக்கேற்றிக்கொண்டே போனோம்.
 
இத்தனைக்கும் எனக்கு ஆரம்பத்திலேயே முழுக்கதையும் கற்பனையில் வந்து விடவில்லை, இரண்டு முன்னால் பள்ளி பருவ காதலர்கள் சந்திக்கிறார்கள்.
 
அவர்கள் சந்தித்த அன்று இரவு நடக்கக்கூடிய ஒருநாள் சம்பவங்கள் இதை எப்படி எழுதலாம்? என்றுதான் ஆரம்பித்தேன், ஒரு காட்சி முடிக்கும்போது, அடுத்தக் காட்சி என்னவென்று தெரியாது.
 
ஆனால், முந்தய காட்சி, அடுத்தக் காட்சியின் தொடர்ச்சியாக ஏதோவொன்றைக் கொடுக்கும். இப்படி ஒவ்வொரு காட்சியாக எழுதி முடிக்கும்போது முழுப்படத்துக்கான திரைக்கதை தயாராகிவிட்டது.
 
–  ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார், அதே தலைப்பில் (‘96’) அவருடைய படைப்பாக வெளிவந்த நூலில் பகிர்ந்து கொண்ட தகவல்.
 
Comments (0)
Add Comment