90-களின் காலகட்டத்தில், பள்ளி விட்டு வந்ததும் சன் டிவியில் ஓடும் குழந்தைகளுக்கான சீரியலான ‘மை டியர் பூதம்’ தான் தமிழ் ரசிகர்களுக்கு நிவேதா தாமசின் அறிமுகம்.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்தவர், பின்னாளில் டோலிவுட் திரையுலகின் முன்னணி ஹீரோக்களான நானி மற்றும் ஜூனியர் என்டிஆர் உட்பட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தமிழில் விஜய், கமல்ஹாசன் மற்றும் ரஜினி என பெரும் நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
கேரளாவில் உள்ள கன்னூரில் 1995-ம் ஆண்டு பிறந்தார் நிவேதா தாமஸ்.

குழந்தை நட்சத்திரமாக மலையாளப் படமான ‘வெறுதே ஒரு பாரியா’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அப்படத்திற்காக கேரள அரசின் மாநில அரசு விருதையும் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் அறியப்படும் நட்சத்திரமாக உயர்ந்தார்.
தமிழில் சன் டிவி தொலைக் காட்சியில் இவர் நடித்த ‘மை டியர் பூதம்’ தொடரே குழந்தைகளின் பேவரைட்டாக மாற்றியது.
அத்தோடரில் பூதத்தின் தோழியாக வந்த கௌரி கதாப்பாத்திரம் அனைவரையும் விரும்ப வைத்தது. நடிகர் விஜயின் ‘குருவி’ படத்திலும் தங்கையாக நடித்து இருப்பார்.
டோலிவுட் டாப் ஹீரோயின்
தமிழில் நடிகர் ஜெய் உடன் இணைந்து கதாநாயகியாக ‘நவீன சரஸ்வதி சபதம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் நிவேதிதாவை பார்த்த அனைவரும் மிகவும் ஆச்சரியப்பட்டு இருந்தனர்.
பின்னர் விஜய்யுடன் ‘ஜில்லா’ படத்தில் மீண்டும் அவரது தங்கையாக நடித்திருந்தார்.
மலையாளப் படம் திரிஷ்யத்தின் ரீமேக் படமான பாபநாசத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்திருந்தார்.
படத்தில் அனைத்து காட்சிகளிலும் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 2016-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஜென்டில்மேன்’ படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து அவரது டோலிவுட்டில் அவரது என்ட்ரியைக் கொடுத்தார்.

நடித்த முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார். பிலிம்பேர் விருதிற்கும் நாமினேட் செய்யப்பட்டார்.
அதனைத் தொடந்து மீண்டும் நானிக்கு ஜோடியாக ‘நின்னு கோரி’ படத்தில் ஜோடி சேர்ந்தார்.
‘ஜெய் லவா குசா’ படத்தில் தெலுங்கின் முன்னனி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் உடன் சேர்ந்து நடித்திருந்தார்.
அதோடு, தெலுங்கு ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின் ஆகவும் உருவெடுத்தார்.
முன்னணி நடிகர்களுடன்
இந்திப் படமான பிங்க் படத்தின் ரீமேக்கான வக்கீல் சாப் படத்தில், பவன் கல்யாண் உடன் நடித்து இருப்பார்.
கடந்த செப்டம்பர் 6 அன்று 35 என்ற படத்தில் நடித்து இருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மூன்று மொழி திரையுலகின் முன்னணி நடிகையாக நடித்து வரும் நிவேதா இன்னும் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
– நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ்