Take a fresh look at your lifestyle.

திரௌபதி அம்மன் பாடலுக்கு இசையமைத்த ஜிப்ரான்!

261

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் ஜிப்ரான் வைபோதா. இவர் தமிழில் வாகை சூடவா, குட்டிப்புலி, நையாண்டி, அறம், தீரன் அதிகாரம் ஒன்று, குரங்கு பெடல், ஆயுதம் என பல்வேறு படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர் தற்போது திரௌபதி அம்மனுக்கான பாடல் ஒன்றுக்கு இசையமைத்துள்ளார். அலங்கு படத்தின் மூலம் புகழ்பெற்ற ஹீரோவான குணாநிதி அவர்களின் இயக்கத்திலும், அதே படத்தின் தயாரிப்பாளரான சங்கமித்ரா அதாவது அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் தயாரிப்பிலும் உருவாகி உள்ளது.

கு கார்த்திக் எழுதிய இந்தப் பாடல் வரிகளை ஸ்ரீதர் ரமேஷ், கோல்ட் தேவராஜ், ரோஷினி JKV, கனகலட்சுமி சுச்சாரிதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இந்தப் பாடல் வருகிற ஞாயிற்றுக்கிழமை 11-ம் தேதி மாமல்லபுரம் அருகில் திருவிடந்தை என்ற கிராமத்தில் பாமக சார்பில் நடைபெற இருக்கும் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடுக்காக பிரத்தியேகமாக தயார் செய்துள்ளனர்.

மேலும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பாடலை வெளியிட்டு அதில் சில வரிகளை பதிவிட்டு உள்ளார்.

“கரகம் ஏந்தி வரோம்
பரம்பரை வாழணுமே நெருப்பில் ஆடிவரோம்
தீமைப் பொசுங்கணுமே வரங்கள் தா தேவி பாஞ்சாலி”

இவரின் இந்தப் பதிவு வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.