Take a fresh look at your lifestyle.

வழக்கமான கதையை வித்தியாசமாகக் காட்டிய மணிவண்ணன்!

36
1987-ல் இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் பிரபு, சத்யராஜ், நதியா, காந்திமதி சுதாசந்திரன், விஜயன், நிழல்கள்ரவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த திரைப்படம் சின்னத்தம்பி பெரியதம்பி.
 
 
இந்த படத்தோட கதை வழக்கமாக எல்லோர் குடும்பத்திலும் நிகழும் சம்பவங்களை ரசிக்கும்படி சொல்லி இருந்தார் இயக்குநர் மணிவண்ணன்.
 
காந்திமதியின் மகன் சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி போனவர் பல வருடங்களுக்கு பிறகு பணக்காரராக திரும்பி வருகிறார். அவரது மகள் நதியாவின் திருமணத்திற்கு அழைக்க வருகிறார்.
 
ஆனால் காந்திமதியோ தனது மகள் வழி பேரன்களான பிரபு, சத்யராஜ் இருவரில் ஒருவருக்கு நதியாவை திருமணம் செய்துதர வேண்டும் என உரிமை கொண்டாடுகிறார்..
 
ஆனால் மகனோ அந்தஸ்து படிப்பில்லை ஆகிய காரணங்களை சுட்டிகாட்டி ஒப்புகொள்ள மறுக்கிறார். விளைவு காந்திமதியின் அளவில்லா சாபத்தை வாங்கி கொண்டு கிளம்புகிறார்.
 
ஆனால் பிரபுவும் சத்யராஜிம் மாமாவின் பேச்சில் நியாயம் இருப்பதை உணர்ந்து திருமணத்திற்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். ஆனால், காந்திமதியோ போகக்கூடாது என ஆர்ப்பாட்டம் செய்கிறார்.
 
ஆனால் இருவரும் காந்திமதிக்குத் தெரியாமல் போகிறார்கள்.
 
ஆனால் அங்கே காந்திமதியின் சாபமோ, தற்செயல் நிகழ்வோ நதியாவின் தாய், தந்தை மாண்டுவிட, திருமணமும் நின்றுபோய் பார்ட்னர்களும் கடன்காரர்களும் சொத்துக்களை பங்க போட்டுகொண்டு நதியாவை நிர்கதியாக நடுத்தெருவில் நிறுத்திவிட்டு போய்விடுகிறார்கள்.
 
திருமணத்திற்கு சென்ற பிரபுவும் சத்யராஜும் மாமன் மகளை அழைத்து கொண்டு ஊர் திரும்புகிறார்கள்.
 
காந்திமதி தன்சாபம் இப்படி பலித்துவிட்டதாக எண்ணி கலங்குகிறார்..
 
பெரிய அந்தஸ்தில் இருந்த நதியா நிலைமை மாறியவுடன் அதற்கேற்ப தனது மனதை மாற்றிகொண்டு கிராமத்து வாழ்க்கைக்கு சட்டென்று பழகிக் கொள்கிறார்.
 
ரொமான்டிக் ஹீரோவான பிரபுவின் பக்கம் தனது மனதை திருப்புகிறார்.
 
இதில் சத்யராஜுக்கு கொஞ்சம் வருத்தமே பின்பு அவரும் பக்கத்துவீட்டு பெண்ணிற்கு மறுவாழ்வு தருகிறார்.
 
சின்னத் தம்பியாக பிரபு பொறுப்பான ரொமேண்டிக் ஹீரோ ..
 
பெரியதம்பியாக சத்யராஜ் ரொமென்ஸ் கூடவே தமாசு அப்ப அப்போ ஆக்ஸன் அப்பாவிதனமான தொல்லைகள் மற்றும் லொள்ளுகள் செய்து படத்தை ரசிக்க வைக்கிறார்.
 
வில்லனாக நிழல்கள்ரவி முன்பு நதியாவுக்கு நிச்சயிக்கப்பட்ட பணக்கார மாப்பிளை இவரே பிரபுவும் சத்யராஜும் இவரிடமே வேலை பார்க்கிறார்கள்.
 
நதியாவும் அங்கே வேலைக்கு போகிறார். நதியா ஏழை ஆனபின் திருமணத்தை நிறுத்தி ஓடிப்போனவர், நதியாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு சத்யராஜால் கொல்லப்படுகிறார்.
 
பிரபுவுக்கும் நதியாவுக்கு திருமணத்தை நடத்திவிட்டு ஜெயிலுக்குப் போனவர், பலவருடங்கள் கழித்து விடுதலை ஆகிவருகிறார்.
 
சத்யராஜ் திரும்ப வந்தபின் அவருக்கு சுதாசந்திரனுடன் திருமணம் செய்துவைத்து இருவரும் ஒன்றாக வாழ்க்கையைத் தொடங்குகின்றனர்.
 
இசை கங்கை அமரன் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஒரு காதல் என்பது என்ற ஒருபாடலுக்கு மட்டும் இளையராஜா இசை.
 
படமாக்கப்பட்ட விதத்தைப் பார்த்தால், கொஞ்சம் சிரிப்பு மறுகணம் சோகம் இப்படி மாறி மாறி டாப்கியரில் படத்தைக் கொண்டு போகிறார் இயக்குநர் மணிவண்ணன்.
 
எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத அனுபவம் தருகிறது இந்த சின்னத்தம்பி பெரியதம்பி திரைப்படம்
 

– கவின் லோகன்