‘டிராப் சிட்டி’ மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் யோகி பாபு!

தமிழ் சினிமாவில் உயர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து கதாநாயகனாக ‘பொம்மை நாயகி’, ‘போட்’ போன்ற படங்களில் நடித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார் யோகி பாபு.

மேலும் ‘மண்ணாங்கட்டி’, ‘வானவன்’ மற்றும் ‘ஜோரா கைய தட்டுங்க’ போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் யோகி பாபு ‘டிராப் சிட்டி’ திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகவுள்ளார்.

இந்தப் படத்தை டெல் கே. கணேசன் இயக்குகிறார். இதில் பிராண்டன் டி. ஜாக்சன், ஜே ஜென்கின்ஸ், நெப்போலியன், ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் யோகி பாபு ஆங்கில ராப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சனைப் போல நடனமாடும் ஒரு தனித்துவமான காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் டெல் கணேசன் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என இரட்டை திறமைகளில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரையும் தனது திரைப்படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் டெல் கணேசன்.

இப்படத்தில் நடிக்கும் யோகி பாபுவின் கதாபாத்திரம் இசை துறையில் ஒரு இளம் கலைஞனின் போராட்டத்தைக் காட்டுகிறது.

‘டிராப் சிட்டி’ திரைப்படத்தில் இதுவரை கண்டிராத கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவை ஹாலிவுட்டில் இயக்குநர் டெல் கணேசன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Comments (0)
Add Comment