வித் லவ்: நவீன அகப்பாடல்!

கவிஞர் கரிகாலனின் திரைப்பார்வை

இந்த பிப்ரவரி மாதத்தை அழகாக, பொருளுடையதாக, மாற்றியிருக்கிற படம் வித் லவ். தாடி, தம், குடி புலம்பல், டாக்ஸிக், இப்படி எந்த க்ளிஷேவும் இல்லாத மென்மையான புத்திசாலித்தனமான படம்.

காதலர்களாக உருவெடுக்கும் இருவர், தங்கள் காதலை சொல்லத் தயங்கிய தம் முன்னாள் காதலரைச் சந்திக்கும் ஒன்லைன்.

பிரமாதமாக வொர்க்கவுட்டாகி இருக்கிறது. அப்படி சந்திக்கும்போது இவர்கள் காதல் என்னவாகிறது?

காதலை ஜென் Z தலைமுறை (குறிப்பாக பெண்கள்) எந்த அளவு emotional balancing உடன் அணுகுகிறார்கள்? என்பதை விவாதிக்கிற படம்.

காதலின் அழகு அதன் அபூரணத்தை விளங்கிக் கொள்வதுதான். ஆனால் ஆண்களால் அப்படி இருக்க முடிவதில்லை.

காதலில் தன்னை இழப்பது முழுமையல்ல. மாறாக self love, personal development இவற்றோடான நவீன காதல் மதிப்பீட்டை சமகாலப் பெண்கள் உருவாக்குகிறார்கள்.

நவீன டேட்டிங் சொல்லாடலுகளுள் ஒன்று Goblintimacy. இது Goblin Mode என்பதிலிருந்து உருவான பதம். இது காதலில் பரிபூரணத்திற்கான தேவையை நிராகரிக்கிறது.

மாறாக மெருகூட்டப்படாத தன் இணையின் சுயத்தை அங்கீகரிக்கிறது. வித் லவ் நாயகி ஒரு இன்ஸ்டா இன்ஃப்ளூயென்ஸர்.

அதேவேளை அவள் காதலை Instagrammable ஆகவோ, instaworthy ஆகவோ எண்ணவில்லை. காதல் என்பது உணர்ச்சி ரீதியாக மன ரீதியாக ஆதரவளிக்கும் ஒரு நட்புணர்வு.

காதல் என்பது மனசுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிற ரத்தினக் கல்.

பகிரப்பட்டாத, அமைதியான அன்பின் தருணங்களை உடையது காதல், என்பதைப் புரிந்தவளாக இருக்கிறாள் வித் லவ் நாயகி.

‘பழைய அன்பின் வரலாற்றை
நான் கேட்கும்போதெல்லாம்,
அது பழங்கால வலி,
அது பிரிந்து அல்லது
ஒன்றாக இருப்பது பற்றிய
பண்டைய கதை.
நான் கடந்த காலத்தை
நோக்கித் திரும்பும்போது, ​​
இறுதியில் நீங்கள் வெளிப்படுகிறீர்கள்,
ஒரு துருவ நட்சத்திரத்தின் ஒளியில், காலத்தின் இருளைத் துளைத்து.
என்றென்றும் நினைவில் இருக்கும்
ஒரு பிம்பமாக மாறுகிறீர்கள்!’

என்கிற ரபீந்திரநாத் தாகூரின் கவிதையை வாசிப்பதுபோல மனசுக்கு இதம் தருகிற படம் வித் லவ்.

இப்படியெல்லாம் சொல்வதால் படம் ஏதோ கனமாக இருக்குமோ? அஞ்ச வேண்டாம்.

கலகலவென அருவிபோல் சரளமாக அன்பைப் பொழிகிற படைப்பு.

வெகு நாட்களுக்குப் பிறகு ஓர் அருமையான காதல் விருந்து.

வித் லவ், பிப்ரவரி ட்ரீட்டாக இருக்கிறது. திரையரங்கில் இளமை பட்டாளம். தங்கள் கனவுகளை, தங்கள் விழைவை திரையில் பார்த்து அடையாளம் கண்டு குதூகலிக்கிறது.

இயக்குநர் மதன், நாயகன் அபிஷன் ஜீவிந்த், அரஸ்வரா ராஷன், இந்த டீமை அன்பில் அரவணைத்துக் கொள்வோம்.

நன்றி: பேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment