பாதி சம்பளத்தைத் திருப்பிக் கொடுத்த விஜய்!

ரஜினிகாந்துக்கு நிகராக இன்றைய தினம் 100 கோடிக்கு ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார், விஜய். 2013 ஆம் ஆண்டு அவர் வாங்கிய ஊதியம் 12 கோடி ரூபாய்.

அந்த ஆண்டு வெளியான ‘தலைவா’ படத்துக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுக்கொண்டு நடித்துக் கொடுத்தார்.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்த இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து அமலா பால், சத்யராஜ், சந்தானம், மனோபாலா, பொன்வண்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்த ‘தலைவா’ 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில அரசியல் ரீதியான பிரச்சனைகளால் ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழ்நாட்டில் மட்டும் வெளியானது.

இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம். இதனை கேள்விப்பட்ட விஜய் மனம் உடைந்தார்.

தான் வாங்கிய சம்பளத்தில் 6 கோடி ரூபாயை தயாரிப்பாளருக்கு திருப்பிக் கொடுத்து, அவரது இழப்பை ஈடு செய்தார்.

இந்த தகவலை பிரபல தயாரிப்பாளர் ரமேஷ், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment