ஷங்கருக்கு ‘வேள்பாரி’ தயாரிப்பாளரின் நிபந்தனைகள்!

எழுத்தாளர் சு.வெங்கடேசன், ஆனந்த விகடன் வார இதழில் எழுத்திய வரலாற்று நாவல், ‘வீரயுக நாயகன் வேள்பாரி’.

இதனைத் திரைப்படமாக்க முடிவு செய்த இயக்குநர் ஷங்கர். அந்த நாவலின் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கி வைத்துள்ளார்.

நாவலின் உரிமையை வாங்கியபோது, அவர் ஒரே சமயத்தில் ‘இந்தியன்-2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரு படங்களை இயக்கிக்கொண்டிருந்தார். அவரது துரதிருஷ்டம், இரு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன.

இதனால் நிலை குலைந்து போனார் ஷங்கர். ‘வேள்பாரி’ படத்தை மூன்று பாகங்களாக தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார். இது, தனது கனவுப்படம் என்றும் சொல்லி வந்தார். பட்ஜெட் மிக மிக அதிகம்.

அவரது இரு படங்களின் தோல்வியால் வேள்பாரியை தயாரிக்க எவரும் முன் வரவில்லை. இப்போது, பெரிய தயாரிப்பாளர் ஒருவர், வேள்பாரி நாவலை சினிமாவாக தயாரிக்க முன் வந்துள்ளார்.

ஷங்கருக்கு அவர் சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

அவற்றில் சில:

*படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்பதை முன்கூட்டியே முழு விவரமாக தரவேண்டும்.

* படப்பிடிப்பு எப்போது ஆரம்பம் ஆகும்? எப்போது முடியும்?


*முதலில் கொடுத்த பட்ஜெட்டில் படத்தை முடித்து விட வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் பட்ஜெட்டை அதிகரிக்கக் கூடாது.


* இந்த நிபந்தனைகளை ஒப்புக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனை ஏற்றுக்கொண்ட ஷங்கர், பட வேலைகளைத் தொடங்கி விட்டதாக தகவல்.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment