வாழ்ந்தாலும் ஏசும் – தாழ்ந்தாலும் ஏசும்…!

திரைத் தெறிப்புகள் – 43:

* கவிஞர் கா.மு. ஷெரீப் – தமிழ்த் திரையிசைப் பாடல்களுக்கு இடையே அபூர்வமான சில பாடல்களை எழுதி, நன்மதிப்பைப் பெற்ற பாடலாசிரியர்களில் ஒருவர்.

1956-ம் ஆண்டில் வெளிவந்த ‘நான் பெற்ற செல்வம்’ திரைப்படத்தில், ஜி. ராமநாதன் இசையில், டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் இந்தப் பாடலைக் கேட்கும்போது கணீரென்று இருக்கும்.

நடைமுறையில் நாம் எதிர்கொள்ளும் சமூகவியல் சார்ந்த சிக்கல்களையும், உளவியல் நெருக்கடிகளையும் மிகவும் யதார்த்தமாக வெளிப்படுத்திருப்பார் ஷெரீப்.

இந்தப் படத்தில்  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பாடல்.

“வாழ்ந்தாலும் ஏசும் – தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா…

வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்

இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும் 
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்….”

பழம்பெறும் இசையமைப்பாளரான ஜி.ராமநாதனின் மேதமையை வெளிப்படுத்திருக்கும் இந்தப் பாடலைக் கேட்கும்போது தனித்துவமாக உணர வைக்கும்.

“பண்பாடு இன்றி பாதகம் செய்யும்
பணத்தாசையாலே யாவும் பகைத்திட நினைக்கும்.

குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும்.
குணம் மாறி நடந்தே பகைமையை வளர்க்கும்.”

இந்தப் பாடல் வெளிவந்து 68-ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும், அக்காலத்திய சமூகத்தின் மனதை எவ்வளவு துல்லியமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது?

அரசியல் மொழியில் சொன்னால் – அந்தக் கால ‘மன் கீ பாத்’!

– மணா

Comments (0)
Add Comment