தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகரும், முதலமைச்சர் விஜய்யின் தம்பியுமான விக்ராந்தும், முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேசும் புதிய படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர்.
இந்த புதிய படத்துக்கு ‘அண்டர் 18′ என்று பெயரிட்டுள்ளனர்.
‘மெட்ராஸ்காரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எஸ்.ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜெகதீஷ் இப்படத்தை தயாரிக்கிறார். கார்த்திக் பெருமாள் இயக்குகிறார்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
முன்னணி நடிகர்-நடிகைகள் நடிக்கும் இப்புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
இதில் நடிகர்கள் சரத்குமார், நட்டி நட்ராஜ், நடிகைகள் ராதிகா, ஸ்ரீபிரியா, தயாரிப்பாளர்கள் கதிரேசன், பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆர்.கே.சுரேஷ், இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மருத்துவக் கனவுகளோடு வாழும் ஒரு அப்பாவி இளைஞன் எதிர்பாராத விதமாக ஒரு திட்டமிடப்பட்ட குற்றச் சம்பவத்தில் சிக்கிக்கொள்ள, அவனை மீட்க அவனது பெற்றோர் நடத்தும் போராட்டமே இப்படத்தின் மையக் கதை.
உண்மைச் சம்பவத்தைத் தழுவி இப்படம் உருவாக இருக்கிறது.
ஓசூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன.
ஒளிப்பதிவு: வேல்ராஜ். இசை : சாம் சி.எஸ்.