பல்வேறு வெற்றிப் படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, நடிகராகவும் முத்திரை பதித்து வரும் ஜே.எஸ்.கே இயக்குநராக தற்போது அவதாரம் எடுத்துள்ளார். இவர் எழுதி இயக்கம் திரைப்படத்திற்கு ‘ஃபயர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் டிவியின் பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால் மற்றும் காயத்ரி ஷான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகும் விறுவிறுப்பான திரில்லர் படமாகும்.
இப்படத்திற்கு டி கே (அறிமுகம்) இசையமைக்க, சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.
எஸ்.கே.ஜீவா வசனங்களை எழுதியுள்ளார்.
படத்தொகுப்பை சி.எஸ். பிரேம் குமாரும் கலை இயக்கத்தை சுரேஷ் கல்லேரியும் கவனிக்க, பாடல்வரிகளை மதுர கவியும், ராவும் எழுதுகின்றனர்.
அண்மையில் இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான டும் டும் கல்யாணம் என்ற லிரிக்ஸ் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
#ஜேஎஸ்கே #JSK #பாலாஜி_முருகதாஸ் #Balaji_Murugadas #ரச்சிதா_மகாலட்சுமி #Rachita_mahalakshmi #சாக்ஷி_அகர்வால் #Sakshi_agarwal #காயத்ரி_ஷான் #Gayathri_shan #ஃபயர் #Fire #டி_கே #T_K #சதீஷ்_ஜி #Sathish_ji #எஸ்கே_ஜீவா #SK_Jeeva #சிஎஸ்_பிரேம்_குமார் #CS_Premkumar