டிசம்பரில் வெளியாகிறது ‘திரு. மாணிக்கம்’!

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா என பல பிரபலங்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘திரு. மாணிக்கம்’. இப்படத்திற்கு ‘சீதா ராமம்’ புகழ் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக ‘நாடோடிகள்’ பட கதாநாயகியாக அறிமுகமான அனன்யா நடித்துள்ளார்.

நாசர், தம்பி ராமையா, இளவரசு, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன் என பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கிரைம், திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு, பாடலாசிரியர்கள் சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜி.பி. ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.

சமீபத்தில், இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். டீசரில் இடம்பெற்றுள்ள ‘தவறெனின் வலியதும் வீழும்.. சரியெனின் எளியதும் வாழும்’ என்ற வசனம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

Comments (0)
Add Comment