தவெக எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்த பின், விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. இதுவே தனது கடைசிப்படம் என அவர் அறிவித்து விட்டார்.
பொங்கலுக்கு சில நாட்கள் முன்னதாக இந்தப் படம் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். ஆனால், தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால், படம் வெளியாகவில்லை.
தயாரிப்பாளர், உயர்நீதிமன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் சென்று போராடினார். தீர்வு கிடைக்காததால், வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்டு, மீண்டும் தணிக்கை வாரியக் கதவை தட்டி உள்ளார்.
படம் மறு தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரிய உறுப்பினர்கள், படத்தை எப்போது பார்ப்பார்கள்? படம் எப்போது வெளியாகும்? என்பது தெரியவில்லை.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படக்கூடும். அதற்குள் தணிக்கை சான்றிதழ் கிடைக்காவிட்டால், ஜனநாயகன் தேர்தலுக்கு பிறகே ரிலீஸ் ஆகும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட, அந்த நொடியிலேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும்.
விஜய், அரசியலில் இருப்பதால், அவரும், அவரது கட்சியும், அவரது படமும், இந்த விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்.
தேர்தலுக்கு பிறகே, இந்த விதிகள் விலகும். எனவே, அதுவரை ஜனநாயகனை, ரீலீஸ் செய்ய முடியாது.
இந்த இடைப்பட்ட காலத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசாக அவரது ‘தெறி’ படத்தை வரும் 20 தேதி ரி-ரீலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘தெறி’ விஜய்யின் மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்று என்பதை அனைவரும் அறிவோம்.
– பாப்பாங்குளம் பாரதி.