பிரபலங்களின் பாராட்டு மழையில் தீ – இவன்!

ஜெயமுருகன் T. M கதை, இயக்கத்தில் உருவாகிவரும் படம் தீ – இவன். இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஹாலிவுட் குயின் சன்னி லியோன் கார்த்திகை தீபம் புகழ் அத்திகா, சுகன்யா, சேது அபிதா, மஸ்காரா அஸ்மிதா, யுவராணி, ராதாரவி, இளவரசு, ஜான் விஜய், சிங்கம் புலி உள்பட பலர் நடித்துள்ளனர்.

தீ இவன் படம் குறித்துப் பேசிய இயக்குனர் ஜெயமுருகன், “பராசக்தி, மாமன்னன், விடுதலை படவரிசையில் சமூகப் பார்வை கொண்ட படம் தான் தீ –  இவன். படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நவரசங்களையும் கொட்டி இருக்கிறார்.

யார் பட்டத்தை யார் வேண்டுமானாலும் அடையலாம் ஆனால், நவரசநாயகன் பட்டத்தை யாரும் அடைய முடியாது. அவருக்கு நிகர் அவர்தான் அந்த வித்தையை தீ – இவன் திரைப்படத்தில் பார்க்கலாம்” என்றார்.

சக்தி பிலிம்ஸ் திருப்பூர் சுப்பரமணியம், “மிக அற்புதமான படம் இது. பேமிலிஸ்டோரி கார்த்திக்கும், சுகன்யாவும் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் ரொம்ப அருமையாக நடித்துள்ளார்.

சண்டைக் காட்சிகளை பிரம்மாண்டமா எடுத்துள்ளார்கள்.

கார்த்திக் மிரட்டி உள்ளார். திருப்பூரை சேர்ந்த தம்பி சுமன்.ஜெ, கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அதே போல் வில்லன் நடிகர் ஸ்ரீதர், அசத்தி இருக்கிறார்.

படத்தில் பாடல் அனைத்தும் அற்புதமாக உள்ளது பொதுவாகவே ஜெயமுருகன் அவர்கள் படம் என்றால் ரோஜா மலரே ஆகட்டும், அதற்கு முன் பின் வந்த படங்களாகட்டும் பாடல்கள் சிரப்பாக இருக்கும், மற்றொரு சிறப்பு அவரை பாட்டுக் காரர் என்றுதான் சொல்வார்கள்.

அந்த அளவிற்கு மிகச்சிறப்பா பாடல்கள் தருவார். ஒரு பாட்டிற்கு சன்னிலியோனை ஆடவைத்து மிக பெரிய செலவில் பிரம்மாண்டமாய் செட்டுப்போட்டு படமாக்கியுள்ளார்கள்.

பாடல் மற்றும் ட்ரைலரை பார்த்துவிட்டுப் பேசிய தமிழ்த் திரையுலகின் மார்க்கண்டேயன் சிவகுமார் “நம் மண்ணின் கலாச்சாரத்தை தழுவி எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது அந்த வகையில் இந்த படமும் உறுதியாக வெற்றிபெறும். வாழ்த்துகள்” என்று பாராட்டினார்.

 

Comments (0)
Add Comment