அருமையான காதல் படைப்பாக வெளியாகும் ‘தருணம்’!

‘தேஜாவு’ என்ற திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ஒரு அருமையான காதல் கதை மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார்.

வாழ்க்கை பல தருணங்களால் ஆனது. ஆனால், ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும். அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன், பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயர்தரமான படைப்பாகத் தயாரித்துள்ளனர்.

கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள இந்த ‘தருணம்’ திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

Comments (0)
Add Comment