ரிலீஸ் ரேஸில் இருந்து விலகிய தங்கலான், வணங்கான்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தங்கலான் படமும் இயக்குநர் பாலாவின் வணங்கான் படமும் ஒரே தேதியில் வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியீட்டில் சில மாற்றங்கள் செய்து உள்ளது அந்தந்த படக்குழு.

கடந்த வாரம் வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த வாரம் ரயில், லாந்தர், பயமறியான் திரைப்படங்களுடன் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு போக்கிரி, துப்பாக்கி திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.

தொடர்ந்து, ஜூலை மாதம் இந்தியன் – 2, ராயன், கல்கி ஏடி போன்ற பெரிய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.

இதனால், தங்கலான் மற்றும் வணங்கான் ஆகிய படங்கள் ஜூலை வெளியீட்டிலிருந்து பின்வாங்கியுள்ளன.

இதற்கிடையே, ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருந்த நடிகர் அல்லு அர்ஜூனின் புஷ்பா – 2 திரைப்படமும் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளதால் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி விக்ரம் நடித்த தங்கலான் படமும், அருண் விஜய்யின் வணங்கான் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Comments (0)
Add Comment