நடிகை திரிஷாவின் பரமபதம் விளையாட்டு படத்தை இயக்கிய இயக்குநர் K. திருஞானம் எழுதி இயக்க, சுந்தர் சி. நாயகனாக நடிக்க, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் “ஒன் 2 ஒன்” படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன், இதுவரையிலும் ஏற்று நடித்திராத வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர்.C மிரட்டலாக நடித்துள்ளார்.
அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் “பரமபதம் விளையாட்டு” படத்தில் நாயகனாக நடித்த விஜய் வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர்களோடு நடிகை நீது சந்த்ரா, ராகினி திவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ்கான் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
– தேஜேஷ்