‘மாவீரன்’ படத்தின் விமர்சனம் மற்றும் வர்த்தக வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் சினிமாவில் அடுத்தக் கட்டத்திற்கு மாறியுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் திரைப்படமான அமரனில் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார்.
‘அமரன்’ படத்திற்கான படப்பிடிப்பு மே மாத இறுதியில் முடிவடைந்த நிலையில், இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை விரைவில் தயாரிப்பாளர்களான ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து அறிவிக்க உள்ளனர்.
‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஹனுன் பாவ்ரா, அஜய் நாக ராமன், மிர் சல்மான், கௌரவ் வெங்கடேஷ், ஸ்ரீகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்குமார். ஒளிப்பதிவை சி.எச்.சாய். படத்தொகுப்பு ஆர்.கலைவாணன்.
– தேஜேஷ்.