திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், இசை அமைப்பாளர் என பன்முகம் கொண்டவர் சிங்கீதம் சீனிவாச ராவ். இப்போது அவருக்கு வயது 94.
கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 60 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
1988 ஆம் ஆண்டில் அவர் முதல் இந்திய மவுனத் திரைப்படமான ‘புஸ்பக்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார்.
கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த படம். இது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தேசிய பொழுதுபோக்கு விருது பெற்றது.
தமிழில், இந்தப் படம், ‘பேசும் படம்’ என்ற பெயரில் வெளியானது. இது தவிர, ராஜபார்வை, அபூர்வ சகோதர்கள், மைக்கேல் மதன் காம்ராஜன், மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழ் படங்களையும் டைரக்டு செய்துள்ளார்.
இதுவரை 60 படங்களை இயக்கியுள்ள சிங்கீதம் சீனிவாச ராவ், தனது 94 வயதில், புதிய படத்தை டைரக்டு செய்யத் தயாராகி விட்டார்.
பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ், இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இளம் தலைமுறையின் காதலை, இந்தப் படம் பேசுகிறது. முற்றிலும் புதுமுகங்கள் இதில் நடிக்க உள்ளனர்.
– பாப்பாங்குளம் பாரதி