’தக் லைஃப்’ படத்தில் இணைந்த சிம்பு!

‘பொன்னியின் செல்வன்’ படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார்.

‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இரு ஜாம்பவான்களும் இணைவதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தில் கலெக்டர் வேடத்தில் நடிப்பதற்கு துல்கர் சல்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார்.

அவருக்கு பதிலாக நடிக்க வேறு நடிகரை படக்குழு தேடி வந்தது. தெலுங்கு நடிகர் நாணி நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வேடத்தில் முதலில் சிம்புவைத்தான் மணிரத்னம், மனதில் வைத்திருந்தார். ஆனால் கமல்ஹாசன் தயாரிக்க, தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்க சிம்பு, நீண்ட தலைமுடி வளர்க்கிறார்.

முடியை எடுக்க வேண்டியிருக்குமே என்பதால் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க தயக்கம் காட்டினார். அதன் பிறகே துல்கர் சல்மானை ஒப்பந்தம் செய்தனர்.

கடைசியில் அங்கே சுற்றி, இங்கே சுற்றி அந்த கேரக்டர் சிம்புவிடமே வந்து சேர்ந்துள்ளது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்பு நடித்துள்ளார்.

‘தக் லைஃப்’ படத்தின் ஷுட்டிங் இப்போது செர்பியா நாட்டில் நடந்து வருகிறது. கமல்ஹாசன் – திரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

-பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment