1980 மற்றும் 90 காலகட்டத்தில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் கண்ணழகி நடிகை மாதவி. இவரின் உண்மையான பெயர் கனக விஜயலக்ஷ்மி.
பின்னர் படங்களில் நடிக்கத் தொடங்கியதும் தனது பெயரை மாதவி என மாற்றிக் கொண்டார்.
சிறு வயது முதலே இவருக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். கிட்டத்தட்ட 1000-ற்கும் அதிகமான மேடைகளில் பரத நாட்டியம் ஆடி இருக்கின்றார்.
இவரின் 14-ஆவது வயதில் முதல் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. தமிழில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் மாதவி முதன் முதலில் ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படமே பயங்கர ஹிட் கொடுத்தமையால் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.
அந்த வகையில் கமல், ரஜினி, சிரஞ்சீவி எனப் பல முன்னணி நடிகர்களுடனும் போட்டி போட்டு நடித்தார். கிட்டத்தட்ட 7 மொழிகளில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தில்லுமுல்லு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்துவைத்த மாதவி, ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராகவும் இருந்திருக்கின்றார்.
அந்தப் படத்திற்குப் பின் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அதன்படி தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை, எல்லாம் இன்பமயம் மற்றும் காக்கிச் சட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்து சூப்பர் டிப்பர் ஹிட் கொடுத்தார்.
அழகே அழகு.. தேவதை.. ஆயிரம் பாவலர் எழுதும் காவியம் என ‘ராஜபார்வை’ படத்தில் கமல்ஹாசன் நடிகை மாதவியின் அழகை வர்ணித்துப் பாட்டுப்பாடி இருப்பார். அந்தப் பாடலில் வரும் அத்தனை அழகிற்கும் சொந்தக்காரராக இருந்தவர்.
திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாலும் இன்றுவரை தனக்கு இந்தியாவில் ரஜினிகாந்த் உட்பட நிறைய நெருங்கிய நண்பர்கள் இருப்பதாகக் கூறி வருகின்றார் மாதவி.