கோபத்திலும், பாசம் காட்டுவதிலும் பொங்கிய கண்ணாம்பா!

‘மனோகரா பொறுத்தது போதும். பொங்கி எழு’- கலைஞர் எழுதிய சுள்ளென்ற வசனத்தையும், பொறி பறக்கிற ஆவேசத்துடன் ‘மனோகரா’ படத்தில் பேசிய மூத்த நடிகை கண்ணாம்பாவை மறக்க முடியுமா?

பி.யு.சின்னப்பாவுடன் ‘கண்ணகி’ படத்தில் இணையாக நடித்த இவர் எம்.ஜி.ஆருக்குத் தாயாக ‘தாய் சொல்லைத் தட்டாதே’ படத்தில் நடித்திருப்பார.

சிவாஜிக்கு அம்மாவாகப் பல படங்களில் நடித்தாலும், ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்தில் கனிவு பொங்கும் தாயாக நடிப்பில் வாழ்ந்திருப்பார்.

தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் உச்சரிப்பில் தனிக்கவனம் காட்டியவர் கண்ணாம்பா.

எம்.ஜி.ஆர், சிவாஜிக்குத் தாயாகப் பாசத்தைக் காட்டிய கண்ணாம்பா தமிழ்த் திரையுலகம் மறக்க முடியாத நட்சத்திரம்.

Comments (0)
Add Comment